ஆட்சிகள் தான் மாறியுள்ளதே தவிர மக்களின் காட்சிகள் மாறவில்லை; பிரேமலதா விஜயகாந்த்

ராட்சத வடிகால்கள் அமைத்து சென்னையின் வெள்ள பாதிப்பிற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இரண்டு நாட்கள் மழைக்கே சென்னை கடல் போல் மாறியுள்ளது. நாற்பது, ஐம்பது…

ராட்சத வடிகால்கள் அமைத்து சென்னையின் வெள்ள பாதிப்பிற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இரண்டு நாட்கள் மழைக்கே சென்னை கடல் போல் மாறியுள்ளது. நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக இப்பகுதியில் குடியிருக்கும் மழை காலங்கள் மிகவும் கடினமாக இருப்பதாகவும், அதற்கு ஒரு தீர்வு வேண்டுமென மக்கள் தங்களை கேட்பதாக கூறினார். நான் ஏற்கனவே கூறியது போல், சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு இரண்டாயிரம் போதாது, ஐந்தாயிரம் வழங்க வேண்டுமெனவும், டெல்டா பகுதி விவசாயிகளை இந்த அரசாங்கம் காக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

“தற்போதைய மழை இயற்கை பேரிடராக இருந்தாலும், இதில் வருடந்தோறும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ராட்சத வடிகால் வசதிகளை அமைத்து, ஹாங்காங் போல் சென்னையை மாற்ற வேண்டும். சமாதிகள், மேம்பாலங்கள், நினைவிடங்கள் கட்டுவதை விடுத்து சென்னையில் ஏற்படும் வெள்ள பாத்திரப்பிற்கு அடுத்த மழை காலத்திற்குள் நிரந்தர தீர்வினை காணவேண்டும்.

ஒரு அரசியல் கட்சியாக பொதுமக்களுக்கு நாங்கள் உணவு அளிக்கலாம், ஆளும் கட்சியும் அதையே செய்ய கூடாது. இதை நான் குறையாக கூறவில்லை. ஆனால், இந்நேரத்தில் அரசாங்கம் வேகமாக செயல்பட வேண்டும். பல இடங்களில் மின்சாரம் கிடைக்கவில்லை, மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தை தி.மு.க, அ.தி.மு.க. ஆட்சி செய்துள்ளது. தற்போதைய முதல்வராக உள்ள ஸ்டாலின், முன்பு சென்னையின் மேயராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். ஆனாலும், ஆட்சிகள் தான் மாறியுள்ளதே தவிர மக்களின் காட்சிகள் மாறவில்லை. காட்சிகளும் மாற வேண்டும், சிங்கப்பூரை போல் சென்னையை மாற்ற வேண்டும்” என அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.