மார்ச் 29-ல் பிரசாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா விஜயகாந்த்!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்ச் 29 ஆம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி…

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்ச் 29 ஆம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது.  மார்ச் 20 முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதையடுத்து,  தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு விருதுநகர், மத்திய சென்னை உள்ளிட்ட 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  இதனிடையே அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு, வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்ச் 29 ஆம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.  அவர் மார்ச் 29 இல் நீலகிரியில் பிரச்சாரத்தை தொடங்கி, ஏப்ரல் 17 ல் விருதுநகரில் நிறைவு செய்யும் விதமாக பிரசார அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

https://twitter.com/PremallathaDmdk/status/1772857337474073055

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.