முக்கியச் செய்திகள் இந்தியா தேர்தல் 2021

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை!

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 200 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

மேற்கு வங்கத்ததில் உள்ள 294 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. எட்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி- காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது.

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மதிய நிலவரப்படி 200 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 88 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்க 148 தொகுதியில் வெற்றி பெற்றிருக்கவேண்டும். இந்நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கையில் முன்னனியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றால் மேற்கு வங்கத்தில் 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:

Related posts

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Halley karthi

ஒலிம்பிக் போட்டியில் இந்திய கோல்ப் வீரர் உதயன் மனே

தனியார் மருத்துவமனைகளுக்கான தடுப்பூசி விலை நிர்ணயம்!

Ezhilarasan