உசிலம்பட்டியில் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் மீது வேகமாக வந்த கார் அடுத்தடுத்து மோதியதில் கர்ப்பிணி பெண் உள்பட 5 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது வேகமாக வந்த கார் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கள்ளபட்டியைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்ற கர்ப்பிணி பெண் உள்பட ராஜக்காபட்டியைச் சேர்ந்த மலைச்சாமி, வி.பெருமாள்பட்டியைச் சேர்ந்த கல்பனா, ஒத்தப்பாறைப்பட்டியைச் சேர்ந்த சுந்தரம், உத்தப்பநாயக்கணூரைச் சேர்ந்த முத்துலட்சுமி என்ற 5 பேர் காயமடைந்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்களை 5 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஐவருக்கும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்திற்கு காரணமான கார் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த தென்னரசு என்பது தெரியவந்துள்ளது.
சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Advertisement: