முக்கியச் செய்திகள் இந்தியா

கோடை வெப்பம் – பள்ளி நேரங்களை மாற்றியமைக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

இந்தியா முழுவதும் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளி மாணவ-மாணவிகளை காக்கும் வகையில் பள்ளி நேரங்களை மாற்றி அமைக்க மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பிப்ரவரி மாதம் நிறைவடைந்ததில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. மேலும் மாலை 4 மணி வரை வெப்ப காற்று நீடிக்கிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெயில் கூடுதலாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது. வெயில் அதிகளவு உள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டதால், தற்போது கோடை காலங்களிலும் பள்ளிகள் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் தற்போது மாணவர்கள் தேர்வுகளும் எழுதி வருகின்றனர். வெயிலோடு சென்று மாணவர்கள் தேர்வு எழுதுவது மற்றும் பள்ளிக்கு செல்வது, அவர்களது உடல்நிலையை பாதிக்கும் என்றும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனவே, இதனை கருத்தில் கொண்டு கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகளை காக்கும் வகையில் பள்ளி நேரங்களை மாற்றி அமைக்க மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

 

பள்ளி வகுப்புகளை காலை 7 மணிக்கு தொடங்கி நண்பகலுக்கு முன்பாக முடிக்க வேண்டும் என்றும், பள்ளிகளின் நேரத்தை குறைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. சூரிய வெப்பம் அதிகமாக உள்ளதால் வெளி விளையாட்டுகளை காலை நேரத்திலேயே நடத்தலாம் என மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

 

பள்ளிகளில் காலையில் நடத்தப்படும் காலை வழிபாட்டை வகுப்பறை அல்லது நிழலாக உள்ள பகுதியில் நடத்த வேண்டும். பள்ளி வாகனங்கள் அதிக அளவிலான கூட்ட நெரிசலாக இருக்க கூடாது.வாகனங்களில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகளுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றக்கூடாது. பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டி மற்றும் தேவையான குடிநீர் வைத்திருக்க வேண்டும் என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

முடிந்த அளவு தங்களது குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்த வர வேண்டும் என்றும், மாணவர்கள் தங்களுக்கு தேவையான குடிநீரை எடுத்த வர வேண்டும். அதே போல் சூரிய வெப்பத்திலிலுந்து காத்துக்கொள்ள தொப்பி மற்றும் குடைகளை கொண்டு வர வேண்டும். பள்ளி வளாகங்களில் ஆங்காங்கே தேவையான அளவு குடிநீர் வசதி செய்தி கொடுக்க வேண்டும் எனவும் மத்திய கல்வித்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

கடுமையான வெப்பம் காரணமாக டெல்லி உள்ளிட்ட பல வட மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மத்திய கல்வித் துறை அமைச்சகம் சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மும்பையில் இருந்து 5,03,210 கோவிஷீல்ட் தடுப்பூசி சென்னை வந்தன

EZHILARASAN D

கடலில் 12 மணிநேரத்திற்கும் மேலாக தத்தளித்த தமிழக மீனவருக்கு உதவிய இலங்கை கடற்படை

Gayathri Venkatesan

கல்யாணம் செய்ய மறுத்த காதலன்: காதலி வைத்த செக்…!

G SaravanaKumar