முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குப்பை கையாளும் பணியாளர்களுக்கு PPE கிட் வழங்கப்படும் : சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், இன்று ஒரே நாளில் 15,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 10,97,672 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 1,07,145 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனாவுக்கு 94 பேர் உயிரிழந்தனர், ஒட்டுமொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 13,651 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்கள் உபயோகித்த PPE கிட் மற்றும் அவர்கள் சாப்பிட்ட உணவு பொட்டலங்கள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்டவைகளை குப்பை கையாளும் பணியாளர்கள் PPE கிட் அணியாமல் கையாளும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து அனைத்து கொரோனா கேர் சென்டரிலும் குப்பை கையாளும் பணியாளர்களுக்கு PPE கிட் வழங்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், கொரோனா கேர் சென்டர்களில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்கள் உபயோகித்த PPE கிட் மற்றும் அவர்கள் சாப்பிட்ட உணவு பொட்டலங்கள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்டவைகளை குப்பை கையாளும் பணியாளர்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அனைத்து மருத்துவமனைகளிலும் இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாவும், இனி PPE கிட் அணியாமல் குப்பை கையாளும் பணியாளர்கள் பணியில் ஈடுபடாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாவும் தமிழகம் முழுவதும் குப்பை கையாளும் பணியாளர்களுக்கு PPE கிட் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முழு ஊரடங்கு: பயணிகளிடம் அதிக கட்டணம் – டிஜிபி சைலேந்திரபாபு நடவடிக்கை

Arivazhagan Chinnasamy

10.5 சதவீத உள்ஒதுக்கீடு மற்ற சமுதாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாது :கே.பி.அன்பழகன் !

Niruban Chakkaaravarthi

அதிமுகவின் உண்மை தொண்டர்களை விரைவில் சந்திப்பேன்-ஓபிஎஸ்

G SaravanaKumar