முக்கியச் செய்திகள் தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பைக் கண்காணிக்கப் பாகுபாடற்ற குழு அமைக்கப்படும்- உச்சநீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை கண்காணிக்க உச்சநீதிமன்றம் பாகுபாடற்றக்குழு அமைக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை கண்காணிக்கப் பாகுபாடற்ற குழு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

NEERI-யால் பரிந்துரைக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் 3 பேர் இந்த குழுவில் இடம் பெறுவார்கள். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பாக வழக்கறிஞர் தரப்பில் 2பேரை அக்குழுவில் இடம்பெற அனுமதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். எந்த வகையில் தாமிர உற்பத்தியை வேதாந்தா நிறுவனம் தயாரிப்பதற்கு அனுமதி இல்லை என்றும் ஆக்சிஜன் தயாரிக்க மட்டுமே ஸ்டெர்லைட் ஆலை இயங்கும் என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக வலியுறுத்தினர்.

இந்த வழக்கின் வாதத்தின்போது, ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை வழங்கும்போது தமிழக அரசுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் தமிழக அரசுக்கு வழங்குவது ஏற்புடையதாக இல்லை என்றும் மத்திய தொகுப்பிற்கே வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு வாதத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லை ஆலைக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது.

Advertisement:

Related posts

அதிமுகவில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம்!

Gayathri Venkatesan

செவிலியர்கள் மலையாளத்தில் பேச விதித்திருந்த தடை நீக்கம்: கடும் எதிர்ப்பால் நடவடிக்கை!

Halley karthi

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை

Halley karthi