மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்ததை அடுத்து, அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை நேற்று சந்தித்த அவர், தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று 28 முறை ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இந்த மின் கட்டண உயர்வுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா? பல சாக்குப் போக்குகள் சொல்லி தமிழகத்தின் மின்துறை அமைச்சர் அனைத்து தரப்பட்ட மக்களின் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார்.
தற்போது நடைபெற்றுவரும் ஆட்சியில், சிலரைப் பணக்காரர்களாக ஆக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது.
நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா? என்று அந்தப் பதிவில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.