ஒரு வாரத்துக்கு மேலாக மின்தடை; பொதுமக்கள் சாலை மறியல்!

சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு வாரத்திற்கும் மேலாக மின் தடை நிலவுவதால், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை திருவொற்றியூர் அப்பர் சாமி கோயில் தெரு, ஈசானி மூர்த்தி கோயில் தெரு,…

சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு வாரத்திற்கும் மேலாக மின் தடை நிலவுவதால், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை திருவொற்றியூர் அப்பர் சாமி கோயில் தெரு, ஈசானி மூர்த்தி கோயில்
தெரு, மா.வே நாராயணசாமி கோயில் தெரு பட்டினத்தார் கோயில் தெரு உள்ளிட்ட
பகுதிகளில் தொடர்ந்து ஒரு வார காலமாக மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. பலமுறை மின் நிலைய அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டாலும் அதிகாரிகள், ஊழியர்கள் யாரும் எடுப்பதில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் விடுமுறை என்பதால் பொழுதை கழிப்பதற்காக இருந்தபோது சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் எண்ணூர் விரைவுச் சாலை பட்டினத்தார் கோயில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனால் உடன்பாடு இல்லாததால் உடனடியாக மின்வாரிய அதிகாரியை வரவழைத்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் மின்வாரிய உதவி பொறியாளர் தினேஷை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

—ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.