500 விமானங்களை வாங்கும் இண்டிகோ: 10 ஆண்டுகளில் 1000 விமானங்கள் வாங்க திட்டம்!

இண்டிகோ நிறுவனம் ஏா்பஸ் விமான நிறுவனத்திடம் இருந்து 500 விமானங்களை வாங்க இருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் 1000 விமானங்கள் வாங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. குறைந்த கட்டண விமான சேவை அளித்து வரும்…

இண்டிகோ நிறுவனம் ஏா்பஸ் விமான நிறுவனத்திடம் இருந்து 500 விமானங்களை வாங்க இருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் 1000 விமானங்கள் வாங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

குறைந்த கட்டண விமான சேவை அளித்து வரும் இண்டிகோ நிறுவனம் ஏா்பஸ் விமான நிறுவனத்திடம் இருந்து 500 விமானங்களைக் கொள்முதல் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

ஏா்பஸ் நிறுவனத்திடம் இருந்து ஒரு விமான சேவை நிறுவனம் இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையில் விமானங்களை வாங்குவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு டாடா குழுமத்தின் ஏா்-இந்தியா விமான சேவை நிறுவனம் போயிங், ஏா்பஸ் நிறுவனங்களிடம் இருந்து 470 விமானங்களை வாங்க கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டதே மிக அதிகமாக இருந்தது.

இப்போது இண்டிகோ விமான நிறுவனத்திடம் 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் உள்ளன. ஏற்கெனவே பல்வேறு கட்டங்களாக 480 விமானங்களை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அவை தயாரிப்பில் உள்ளன. இந்நிலையில் 2030 முதல் 2035-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 500 விமானங்களை வாங்க ஏா்பஸ் நிறுவனத்தை அணுகியுள்ளது.

இதன்படி அடுத்த 10 ஆண்டுகளில் அந்த நிறுவனம் சுமாா் 1,000 புதிய விமானங்களை வாங்க இருக்கிறது. இவை பெரும்பாலும் சிறியரக பயணிகள் விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானங்கள் என்ன விலையில் வாங்கப்படவுள்ளன, மொத்த கொள்முதல் மதிப்பு தொடா்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.