தென்கொரியாவில் 32 வாகனங்கள் மீது மோதிய பேருந்து – 57 பேர் படுகாயம்!

தென்கொரியாவில் தாறுமாறாக ஓடிய பேருந்து 32 வாகனங்கள் மீது மோதி விபத்திற்குள்ளானது.

தென்கொரிய தலைநகரான சியோல் நகருக்கு அருகில் நிகழ்ந்த விபத்தில் பேருந்து ஒன்று 32 வாகனங்கள் மீது மோதியது. பின்னர் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி நின்றது. இந்த பயங்கர விபத்தில் 57 பேர் காயமடைந்துள்ளதாகவும், 9 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். காலையிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பேருந்தில் திடீரென பிரேக்கு செயலிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். விபத்து நடந்த இடத்தில், மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.