தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகியுள்ளது. இன்று முதல் ஜூலை 31-வரை இணைய வழியில் சுய கணக்கெடுப்பு செய்யலாம், இதனைத்தொடர்ந்து ஆட்டுப் பட்டியல் பதிவுகள் 1 ஆகஸ்ட் 2026 முதல் 30 ஆகஸ்ட் 2026 வரையிலும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் அனைவரும் பங்கேற்க முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள்.
இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்!
உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம்!” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவுடன் முதலமைச்சர் விஜய் இணைய வழியில் சுய கணக்கெடுப்பு செய்யும் வீடியோவையும் இணைத்துள்ளார்.




