பாப் இசையாக இருந்தாலும், ராக் இசையாக இருந்தாலும், அது தமிழ் இசையாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 96வது மார்கழி இசைத் திருவிழாவை புகழ்பெற்ற சபாக்களில் ஒன்றான மியூசிக் அகாடமியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மார்கழி மாதம் முழுவதும் நடக்க உள்ள கச்சேரியில் 100க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களின் அரங்கேற்றம் நடைபெற உள்ளது. நாளொன்றுக்கு, 4 இசைக் கச்சேரிகள் நடைபெறும் மார்கழி இசைத் திருவிழாவை தொடங்கி வைத்தபின், இசைத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து விழாவில் பேசிய அவர், “இசை வளர்த்தல் என்பது கலை வளர்த்தல். கலை வளர்த்தல் என்பது பண்பாடு வளர்த்தல். பண்பாடு வளர்த்தல் என்பது நாகரிகம் வளர்த்தல். மியூசிக் அகாடமி கலை வளர்க்கும் பண்பாட்டு அமைப்பு. நாடகம், இயல், இசை என்பதே சரியான வரிசை என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சொல்வார். தமிழர்களின் இசை மரபு மிகவும் செழுமையானது.
வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறோம் என்பது அரசியல் கட்சிகளுக்கு மட்டுமின்றி, தனிமனித கொள்கையாக மாற வேண்டும். இதுதான் இன்றைய நாட்டிற்கு தேவையானதாக உள்ளது.
எந்த இசை மன்றமாக இருந்தாலும், எந்த வகை இசையாக இருந்தாலும் தமிழிற்கு முன்னுரிமை வழங்குங்கள். தமிழிசை தவறாது ஒலிக்க வேண்டும். பாப் இசையாக இருந்தாலும், ராக் இசையாக இருந்தாலும், அது தமிழ் இசையாக இருக்க வேண்டும். நான் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் எந்தவித பரபரப்பும், டென்ஷனும் இல்லாமல் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி இதுதான்” என்று தெரிவித்தார்.