28.6 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

பொன்னியின் செல்வன் VS நானே வருவேன்?

தனுஷ் தனது சகோதரர் செல்வ ராகவனுடன் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தனுஷ் தற்போது நடித்துவரும் நானே வருவேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். மேலும் அவரது சகோதரரும் திரைப்பட இயக்குநருமான செல்வ ராகவனால் இயக்கத்தில் உருவாகிவருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.பாலிவுட் நடிகை எல்லி அவ்ராமும் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தை வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தனுஷின் முந்தைய படமான திருச்சிற்றம்பலம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல லாபம் ஈட்டி வரும் நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும் நானே வருவேன் இந்தப் படத்தின் மூலம் தனுஷ் தனது சகோதரர் செல்வ ராகவனுடன் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறார் என்பத்தலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் செல்வராகவனும் எரு முக்கிய வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்பு இருவரும் துள்ளுவதோ இளமை, கண்டு கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் இவர்கள் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில் தற்போது நானே வருவேன் படம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.இந்நிலையில், இந்த படத்தைப் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றை நேற்று மாலை 6:20 மணி அளவில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு வெளியிட்டார். அதில் படத்தின் முதல் சிங்கிள் பாடல் நாளை செப்டம்பர் 7, அன்று மாலை 4:40 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் நானே வருவேன் திரைப்படம மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்துடன் மோதவுள்ளது.பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30, அன்று திரையரங்குகளில் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நானே வருவேன் திரைப்படம் ஒரு நாள் முன்னதாக அதாவது செப்டம்பர் 29, அன்று வெளியாகும் எனக் கூரப்படுகிறது.நானே வருவேன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் இப்படி ஒரு தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரவிவருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading