முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக பொதுக்குழு விவகாரம்: ஓ.பி.எஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பு அளித்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்குகளை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த 2-ந் தேதி விசாரித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வழக்கை விசாரித்த நீதிபதிகள், அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில், அதற்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க முடியாது. இருவரும் இணைந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லாதது எனக் கூறி தனி நீதிபதி தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தனர்.

இந்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுக்களை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ‘இந்த விவகாரத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யும்போது, தங்களது தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எச்சரிக்கை; கொடைக்கானலில் கூடாரம் அமைத்து தங்க தடை

Halley Karthik

புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பாஜக எம்.எல்.ஏ வாக்குவாதம்

Web Editor

கடனில் தத்தளிக்கும்போது இலவச வாக்குறுதிகளா ? டிடிவி தினகரன்

Halley Karthik