பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இயக்குனர் மணிரத்னம் கூட்டணி 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
மணிரத்னத்தின் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை லைகா புரொடெக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஜெயரம் ரவி, கார்த்தி, த்ரிஷா, நாசர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்து கொண்டனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மணி ரத்னம்கூட்டணி 1992ம் ஆண்டு வெளியான ரோஜா படத்தில் முதன் முறையாக இணைந்து பணியாற்றினர். பொன்னியின் செல்வன் படத்தில் மூலம் இந்த கூட்டணி இணைந்து 30 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. ரோஜா படத்தின் இணைந்த கூட்டணி இன்று பொன்னியின் செல்வன் வரை தொடர்ந்து வந்துள்ளது.








