சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு! – உச்சநீதிமன்றம் உத்தரவு!

சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சா் க.பொன்முடி,  அவரின் மனைவி விசாலாட்சி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத்…

சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சா் க.பொன்முடி,  அவரின் மனைவி விசாலாட்சி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை,  தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்து இருந்தது.  இந்த நிலையில்,  உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி  ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. மேலும்,  சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.