முக்கியச் செய்திகள் தமிழகம்

பொங்கல் பரிசு தொகுப்பு: தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மளிகை, கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

‘மண் செழிக்கட்டும், மக்கள் மகிழட்டும், வீடு நிறையட்டும், நாடு சிறக்கட்டும்’ என்ற வாசகம் அடங்கிய துணிப்பையில் பொங்கல் சிறப்பு தொகுப்பை பொதுமக்களுக்கு முதலமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொங்கல் பரிசுத் தொகுப்பில்,
1. பச்சரிசி
2. வெல்லம்
3. முந்திரி
4. திராட்சை
5. ஏலக்காய்
6. பாசிப் பருப்பு
7. நெய்
8. மஞ்சள் தூள்
9. மிளகாய் தூள்
10. மல்லித் தூள்
11. கடுகு
12. சீரகம்
13. மிளகு
14. புளி
15. கடலைப் பருப்பு
16. உளுத்தம் பருப்பு
17. ரவை
18. கோதுமை மாவு
19. உப்பு
20. துணிப்பை, கரும்பு, ஆகிய பொருட்கள் வழங்கப்பட உள்ளது. பரிசுத் தொகுப்பினை இடைநில்லாது தொடர்ந்து விநியோகம் செய்திட வசதியாக, நியாய விலைக் கடைகளுக்கான விடுமுறை தினம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 7-ஆம் தேதியன்று அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கை விரைவில் 10 ஆயிரமாகும்: மத்திய அரசு

Mohan Dass

உலகத்தை மாற்றும் கிராமப்புற பெண் தொழில் முனைவோர்கள்; ராகுல் காந்தி

G SaravanaKumar

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,26,789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

Halley Karthik