அம்மா மினி கிளினிக் மூடப்படும் என்ற அறிவிப்பு கண்டனத்திற்குரியது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஏழை, எளிய மக்கள் தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/EPSTamilNadu/status/1478226571336900609
தற்போது அம்மா மினி கிளினிக் திமுக அரசால் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.
https://twitter.com/EPSTamilNadu/status/1478226591255707652
ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதை, திமுக அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.








