ட்விட்டர் பக்கத்தை நிரப்பும் செல்வராகவனின் தத்துவ ட்வீட்கள்

’நம்மை நாமே பார்த்துகொள்வது கடவுளே நம்மை பார்த்துக்கொள்வது போல்’ என்று இயக்குநர் செல்வராகவன் ட்வீட் செய்துள்ளார். சமீப காலங்களில் இயக்குநர் செல்வராகவனின் சமூகவலைதளப் பதிவுகள் அவர் விரக்தியின் வெளிப்பாடை வெளிப்படுத்துவதாக இருப்பதாக நெட்டீசன்கள் கருத்து…

’நம்மை நாமே பார்த்துகொள்வது கடவுளே நம்மை பார்த்துக்கொள்வது போல்’ என்று இயக்குநர் செல்வராகவன் ட்வீட் செய்துள்ளார். சமீப காலங்களில் இயக்குநர் செல்வராகவனின் சமூகவலைதளப் பதிவுகள் அவர் விரக்தியின் வெளிப்பாடை வெளிப்படுத்துவதாக இருப்பதாக நெட்டீசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் செல்வராகவன். ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘என்.ஜி.கே.’ உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன்’ படத்தை இயக்கி வருகிறார்.

https://twitter.com/selvaraghavan/status/1474958102004854787

 

இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் அவரது ட்விட்டர் பகக்த்தில் தொடர்ந்து தத்துவங்களை பகிர்ந்து வருகிறார். கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி மதிப்பு தொடர்பான ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். “ ஒரு இடத்தில் உங்களை மதிக்கவில்லையா , அமைதியாய் புன்னகைத்து விட்டு அங்கிருந்து வெளியேறி விடுங்கள் ! அவமானத்தை சகித்துக் கொண்டு உண்ணும் விருந்தை விட மானத்துடன் உண்ணும் பழையது அமிர்தம்” இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

https://twitter.com/selvaraghavan/status/1474202991133540354

டிசம்பர் 24 ஆம் தேதி, “ முன்னேற்றத்திற்கு மிகப் பெரும் தடங்கலாய் இருப்பது “ பின்னால் பார்த்துக் கொள்ளலாம் “ என்ற நினைப்புதான். சிறிதோ பெரிதோ எந்த காரியத்தையும் உடனே முடித்து விடுங்கள். மனம் முழுக்க ஒரு நிம்மதி பரவி முன்னேற்றத்தை கண் முன்னால் காண்பீர்கள்.” என்று பதிவிட்டிருந்தார். இதுபோல் “ நம் வேதனைகளைக் கேட்க இங்கு யாருக்கும் நேரமில்லை என்றும் அப்படியே கேட்பது போல் தெரிந்தாலும் அது போலிதான் என்றும் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று அவர் மேலும் ஒரு தத்துவத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுருக்கிறார். ”வாழ்க்கையில் மிகக் கொடுமை“ என்ன பாத்துக்க யாருமே இல்லையே “ என்ற புலம்பல்தான். உங்களை எதற்கு “ஒருவர் ‘ பார்த்துக் கொள்ள வேண்டும் ? அது மருத்துவமனையில் நோயாளியாய் இருப்பது போல.! உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். அது கடவுளே உங்களை பார்த்துக் கொள்வது போல்.!” என்று அவர் பதிவிட்டுள்ளார். சமீப காலங்களில் இயக்குநர் செல்வராகவன் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். மனதில் உள்ள கருத்துக்களை தொடர்ந்து சமூகவலைதளங்களில் அவர் வெளிப்படுத்தி வருவது விரக்தியின் வெளிப்பாடாக இருக்கலாம் என்று நெட்டீசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.