ஸ்ரீ வள்ளியம்மன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் விழா

மோகனுாரில் பிரசித்தபெற்ற ஸ்ரீ வள்ளியம்மன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் விழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டம் மோகனுாரில் கொங்கு குலாலர் கிழங்கு நாடு 3 அண்ணமார்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ…

மோகனுாரில் பிரசித்தபெற்ற ஸ்ரீ வள்ளியம்மன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் விழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் மோகனுாரில் கொங்கு குலாலர் கிழங்கு நாடு 3 அண்ணமார்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ வள்ளியம்மன் நம்பியண்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கல் தொடங்கியது.

மாலை 4 மணிக்கு மாமன்மார்கள் அழைப்புதல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு பொங்கல் விழா மலர் வெளியீடுதலும் இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக  பக்தர்கள் அதிகாலை 4 மணிக்கு தீ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்தி கடன் செலுத்தினார். அதைத் தொடர்ந்து கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும் மதியம் 12 மணிக்கு மகா பூஜையும், மாலை 2 மணிக்கு ஊஞ்சல் பாட்டும், 3 மணிக்கு பிராசதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலை 4.30 மணிக்கு பூசாரி வரிசையும், கும்பிடு கொடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை வள்ளியம்மன் அறக்கட்டளை அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

-அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.