வொர்க்அவுட் ஒர்க்ல ரொம்ப சின்ஷியர் ஜிம்முக்கு சென்று புஷ்அப் தண்டால்
எடுத்து போட்டோசூட் எடுத்துக் கொண்ட புதுமண ஜோடியின் வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சரவணபாண்டி. இவர் அதே
பகுதியில் உள்ள ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். அதே ஜிம்மில் பெண்களுக்கான உடற்பயிற்சி பயிற்சியாளராக தேனி மாவட்டத்தை சேர்ந்த அன்னலட்சுமி என்ற இளம்பெண்ணும் பணிபுரிந்துள்ளார்.
இந்நிலையில், இருவரிடையே நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறிய நிலையில் இரு
வீட்டாரும் இவர்களது காதலுக்கு சம்மதம் அளித்த நிலையில், திருமணம்
நிச்சயிக்கப்பட்டு இன்று செல்லூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில்
திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து, திருமண போட்டோ சூட் நடத்துவதை சற்று வித்தியாசமாக யோசித்த புதுமண தம்பதியினர் தாங்கள் வொர்க்அவுட்ல சின்ஷியர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், காதல் தொடங்கிய இடத்திலயே திருமண நாளின் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதற்காகவும் திருமண அலங்காரத்தோடு ஜிம்முக்குச் சென்றனர். அங்கு இருவரும் சேர்ந்து புஷ் அப், மணகனின் முதுகில் மணப்பெண் அமர்ந்த நிலையில், மணமகன் தண்டால் எடுப்பது, லிப்ட் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு அதனை போட்டோ சூட் எடுத்து கொண்டனர். இந்த போட்டோ சூட் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
வெட்டிங் சூட் என்றாலே கன்னத்தில் கை வைத்தும், பூவை பிடித்தவாறும் போன்ற பழைய முறைகளை பயன்படுத்தாமல் சற்று வித்தியாசமாக யோசித்து போட்டோ சூட் நடத்திய தம்பதிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து குவிந்து வருகிறது.
-ம.பவித்ரா





