ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஆன்ட்ரி போடிகோவ் கொலை செய்யப்பட்டார். அவர் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில், பெல்ட்டால் கழுத்து நெறித்து உயிரிழந்த நிலையில், ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
47 வயதாகும் போடிகோவ், கமலேயா தேசிய ஆராய்ச்சி மையத்தின் சூழலியல் மற்றும் கணிதவியல் துறையின் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றி வந்தார். அவர் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் வியாழக்கிழமை அவரது உடல் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக ரஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 2021ஆம் ஆண்டு இவருக்கு சிறந்த விஞ்ஞானிக்கான விருது வழங்கப்பட்டது. கொரோனா பேரிடர் காலத்தில் 2020-ம் ஆண்டு ரஷ்ய நாட்டுக்காக ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசியை கண்டுபிடித்த 18 விஞஞானிகளில் போடிகோவும் ஒருவர்.
முதற்கட்ட விசாரணையில், 29 வயது இளைஞர், போடிகோவுடன் நடந்த வாக்குவாதத்தின் போது ஒரு பெல்ட்டால் கழுத்தை நெறித்துக் கொலை செய்து விட்டு தப்பியோடியது கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட இளைஞர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.