செய்திகள்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 இளைஞர்கள் போக்சோ சட்டத்தில் கைது!

புதுச்சேரியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேரை போலிசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி மனவெளியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவரது நண்பர் ரியாஸ் என்பவர் மூலம் திருவாண்டார்கோயில் பகுதியை சேர்ந்த் 12 ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நட்பாக பழகுவதாக கூறி சிறுமியிடம் பேசி வந்த ரஞ்சித் அவரிடம் நேரில் பேச வேண்டும் என கூறி திருக்கனூர் அழைத்து வந்து தன் நண்பர்களான தினேஷ், பிரசாத், திவ்யநாதன் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதனை அடுத்து வீட்டுக்கு செல்லலாம் என்று கூறி திருக்கனூர் சரஸ்வதி நகரில் உள்ள திவ்யநாதன் வீட்டுக்கு சிறுமியை அழைத்துச் சென்று, நான்கு பேரும் சேர்ந்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதில், அதிர்ச்சி அடைந்த சிறுமி அங்கிருந்து தப்பியோடி தனது தந்தையுடன் நடந்ததை கூறி அழுதுள்ளார். இதையடுத்து, சிறுமியுடன் திருக்கனூர் காவல் நிலையம் சென்று இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், 4 இளைஞர்களையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement:

Related posts

மும்பையில் மூன்று நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தம்!

Karthick

’திருமணத்தைப் பதிவு செய்ய மறுத்து விட்டார்’: எம்.பி மீது தொழிலதிபர் பரபரப்பு புகார்!

Ezhilarasan

மெகபூப முப்தி பாஸ்போர்ட் நிராகரிப்பு!

எல்.ரேணுகாதேவி