சென்னைக்கு கொண்டுவரப்பட்ட 3 லட்சத்து 60 ஆயிரம் கோவிஷீல்டு!

புனேவில் இருந்து விமானம் மூலம் 3 லட்சத்து 60 ஆயிரம் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க…

புனேவில் இருந்து விமானம் மூலம் 3 லட்சத்து 60 ஆயிரம் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது.

இந்நிலையில் புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 3 லட்சத்து 60 ஆயிரம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. இதனை பெற்றுக் கொண்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.