முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காசி தமிழ் சங்கமத்தில் கலந்து கொள்ள மாணவர்களுடன் சென்ற பொன். ராதாகிருஷ்ணன்

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற மாணவர்களை ரயில் மூலம் வழியனுப்பி வைத்து உடன்  சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

தமிழகத்திற்கும், உத்தரபிரதேசத்திற்கும் குறிப்பாக காசிக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையே நீண்டகால தொடர்பு உள்ளது. இதற்காக வாரணாசியில்  ‘காசிதமிழ் சங்கமம்’ என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வாரணாசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான ஆழமான கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்துவதே காசி தமிழ் சங்கமத்தின் நோக்கம் ஆகும். இந்த சங்கமத்தில் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், கலாசார நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இந்த நிகழ்ச்சியின் அறிவுசார் பங்குதாரர்களாக சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் செயல்படுகின்றது.

இந்த நிகழ்ச்சிகளில் சுமார் 2,500 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தலா 210 பேர் கொண்ட 12 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ரயில்கள் வழியாக வாரணாசிக்கு அழைத்து செல்கிறார்கள். அவர்கள் காசி விஸ்வநாதர் கோயில், பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கும் செல்வார்கள். இந்திய மொழிகளை மேம்படுத்துவதற்கான உயர் அதிகாரக்குழு, தமிழ் கலாசாரத்துக்கும், வாரணாசிக்கும் இடையிலான தொடர்பை மீண்டும் உறுதிப்படுத்தி கொண்டாடுகிறது. தமிழ்நாடு மற்றும் வாரணாசி இடையேயான பரந்த உறவின் நோக்கம் இரு அறிவு மற்றும் கலாச்சார மரபுகளை நெருக்கமாக கொண்டு வருவதும், நமது பகிரப்பட்ட பாரம்பரியம் பற்றிய புரிதலை உருவாக்குவதும், இரு பகுதி மக்களுக்கு இடையேயான பிணைப்பை ஆழமாக்குவதும் ஆகும். காசி இராமேஸ்வரம் என்ற இரண்டு வரலாற்று மையங்கள் மூலம் இந்தியாவின் வரலாற்று ஒற்றுமையை புரிந்து கொள்ள இது ஒரு சிறந்த தளமாக இருக்கும். இந்த நிலையில் இராமேஸ்வரத்திலிருந்து நள்ளிரவு 12 மணி அளவில் மாணவர் மற்றும் மாணவிகள் வாரணாசிக்கு புறப்பட்டு சென்றனர், அவர்களை முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் மாணவ மாணவியர்களுடன் தூங்குவதற்கு வரவேற்று அவர்களை வழியனுப்பு வைத்து இது வரும் உடன் சென்றனர்.

மேலும், இது குறித்து நேற்று கும்பகோணம் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 19ம் தேதி காசியில் தமிழ் சங்கமும் என்ற நிகழ்வில் பிரதமர் கலந்து கொள்கிறார் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும்; நாங்குநேரி காங்கிரஸார் போர்க்கொடி

EZHILARASAN D

6 தொகுதிகள் ஒதுக்கப்படாவிட்டால், தனித்துப் போட்டி! – IJK அதிரடி அறிவிப்பு!

Nandhakumar

2நாள் பயணமாக இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர்

G SaravanaKumar