மார்க்கெட்டில் நுழைய ஒரு மணி நேரத்துக்கு ரூ. 5 கட்டணம்!

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் மக்கள் கூட்டமாக கூடுவதைத் தடுக்க காய்கறி மார்க்கெட்டில் நுழைய ஒரு மணி நேரத்திற்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு…

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் மக்கள் கூட்டமாக கூடுவதைத் தடுக்க காய்கறி மார்க்கெட்டில் நுழைய ஒரு மணி நேரத்திற்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேவருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக காய்கறி மற்றும் அசைவ மார்க்கெட் பகுதியில் மக்கள் நுழைய ஒரு மணி நேரத்திற்கு ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.


இது குறித்து நாசிக் காவல்துறை ஆணையர் கூறுகையில் ‘மகாராஷ்டிராவில் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்தால் ஊரடங்கு அமல்படுத்தப்படும். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் மக்கள் பல இன்னல்களைச் சந்திக்க நேரிடம். இதன்காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவதைத் தவிர்க்க இத்தகைய நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்று தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 27,918 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 139 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப்பே மக்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.