ஊரடங்கிற்கு பின் திறக்கப்பட்ட மதுபானக் கடைக்கு சூடம் ஏற்றிய இளைஞர்கள்!

காரைக்காலில் ஊரடங்கிற்கு பின்பு மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், கடையின் முன் சூடம் ஏற்றி கைகளை தட்டி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்திய இளைஞர்கள். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு…

காரைக்காலில் ஊரடங்கிற்கு பின்பு மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், கடையின் முன் சூடம் ஏற்றி கைகளை தட்டி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்திய இளைஞர்கள்.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் மதுக்கடைகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து இன்று முதல் அனைத்து கடைகளையும் திறக்க புதுச்சேரி அரசு உத்தரவிட்டது.

அதன்படி, இன்று காலை காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதனால் அதிகாலை முதலே மதுஅருந்துவோர் கடைகளின் முன் காத்திருந்தனர். அதன்ஒரு பகுதியாக காரைக்கால் பகுதியில் உள்ள ஒரு கடையில் திரண்ட இளைஞர்கள், கடையின் முன் சூடம் ஏற்றி, தேங்காய் உடைந்து, கைகளை தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். மதுபானங்களை வாங்க கூட்டம் கூடியதால் விற்பனை சூடுபிடித்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.