பொய் வழக்கு போட்டதாகக் கூறி காவல் நிலையம் முற்றுகை!

தேனி மாவட்டம் சின்னமனூரில் இளைஞர் மீது பொய் வழக்கு போட்டதாக கூறி பெண்கள் காவல் நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள பகவதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ்…

தேனி மாவட்டம் சின்னமனூரில் இளைஞர் மீது பொய் வழக்கு போட்டதாக கூறி பெண்கள் காவல் நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள பகவதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் அவரது சமுதாய சங்க தேர்தல் காரணமாக பால்பாண்டி என்பவருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து சுரேஷ் எந்த தவறும் செய்யவில்லை எனவும் அவர் மீது பொய் குற்றச்சாட்டு கூறி இருப்பதாகவும் கூறி அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சின்னமனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த போடி துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியசாமி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இரு தரப்பினரின் புகார் குறித்து விரைந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தகவல் தெரிவித்தார். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கும் வரை இங்கிருந்து வெளியேற மாட்டோம் என தொடர் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டுனர்.
—சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.