கள்ளக்குறிச்சியில் மறைந்த செல்லப்பிராணி உடலை உரிய முறையில் அடக்கம் செய்த இளைஞர்களின் செயல் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி நகரில் உள்ள கோட்டைமேடு பகுதியில் லட்டு என்ற நாய் தெருமக்கள் அனைவராலும் பாசமாகவும், செல்லமாகவும் வளர்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த நாய் நேற்று முன்தினம் எதிர்பாராத விதமாக திடீரென மறைந்தது. கோட்டைமேடு தெருவில் மறைந்த நாய் லட்டுவிற்கு அஞ்சலி செலுத்திய அப்பகுதி மக்கள், பின்னர் தெருவில் பேனர் வைத்து இறந்த லட்டுவின் உடலிற்கு மாலை அணிவித்து, உரிய சடங்குகள் செய்து, கோட்டைமேடு பகுதியில் உள்ள ஒரு இடத்தில் அடக்கம் செய்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, மக்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கி வைரலாகி வருகிறது.
–சௌம்யா.மோ






