ராஜேந்திர பாலாஜியிடம் விடிய விடிய விசாரணை

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றது. ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள்…

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றது.

ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கைது காவல் துறையினர் திட்டமிட்ட நிலையில் அவர் தலைமறைவானார். ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய அமைக்கப்பட்ட தனிப்படையினர் பெங்களூரு, புதுச்சேரியில் முகாமிட்டு 19 நாட்களாக அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் நேற்று காரில் சென்றுகொண்டிருந்தபோது ராஜேந்திரபாலாஜியை வழிமறித்து கைது செய்தனர். நேற்றிரவு அவரை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது.

பின்னர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார் ராஜேந்திரபாலாஜி. இன்று காலை ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.