பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு போட்டிகள்?

மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது, மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்களின்…

மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது, மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் தினசரி கொரோனா அதிகரித்து வரும் நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் மற்றும் இதர நாட்களில் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளால் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எனினும், ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையாளர்கள் இன்றி நடத்த, அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறைந்தபட்சம் 400 காளைகள் அனுமதிக்கப்பட்டு, காலை 8 மணி முதல் 3மணிவரை மட்டும் நடத்தலாம், போட்டியில் கலந்துகொள்ளகூடிய மாடுபிடி வீரர்கள், மற்றும் காளை உரிமையாளர்கள், அதிகாரிகள், காவல்துறையினர், ஊடகத்தினர் இரு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.