மாணவர்களுக்கு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

மாணவர்களுக்கு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசுப்பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் வன்முறையில் ஈடுபடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மாணவர்களுக்கு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். சமூக வலைதளத்தில் அவர்…

மாணவர்களுக்கு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசுப்பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் வன்முறையில் ஈடுபடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மாணவர்களுக்கு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், அரசு பள்ளி மாணவர்கள் ஒரு ஆசிரியரை தாக்க முற்படுவதும், வகுப்பறையில் உள்ள நாற்காலியை உடைப்பதும் வேதனை அளிப்பதாக கூறியுள்ளார். மேலும், அறிவையும், திறனையும் வளர்த்து கொள்ளும் இடம் பள்ளிக்கூடம் என்று கூறிய அவர், ஆசிரியர்களிடம் மாணவர்கள் கண்ணியத்துடன் நடந்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பள்ளி மாணவர்கள் இது போன்ற வன்முறையில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் என தெரிவித்த சைலேந்திர பாபு, மீண்டும் இது போன்ற வன்முறையில் மாணவர்கள் ஈடுபட வேண்டாம் என எச்சரித்தார்.

அண்மைச் செய்தி: வடகறியில் உப்பு… சமையல் மாஸ்டர் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மேலாளர் 

மேலும், அரசு பள்ளி என்பது மாணவர்களின் சொத்து என குறிப்பிட்ட அவர், தானும் அரசு பள்ளி மாணவர் தான் என கூறினார். அதேபோல, தான் படிக்கும் போது பள்ளிகளில் தரையில் அமர்ந்துதான் படிக்க வேண்டும். ஆனால், தற்போது மாணவர்களின் வசதிக்காக மேசை, நாற்காலியை அரசு கொடுத்துள்ளது. அதனை மாணவர்கள் முறையாக பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.