15-வது ஐ.பி.எல்-ன் 39-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் களம் கண்டன.
இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால், ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதலே, சிறப்பாக பந்துவீசிய பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் தொடர் விக்கெட்களை கைப்பற்றினர். இதனால், ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது.
அண்மைச் செய்தி: ஆளுநருக்கு அனுப்பப்பட்டது ‘பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா’
அதைத்தொடர்ந்து, 145 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பெங்களூரு அணி களமிறங்கியது. இதில், தொடக்க வீரராக களமிறங்கிய கோலி 9 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை எதிர்கொண்ட பெங்களூரு அணி 19.3 ஓவர்கள் முடிவில் 115 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இதனால், ராஜஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி அபார பெற்றது.
இதனால், 9 போட்டிகளில் களம் கண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 6 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் சந்தித்துள்ளது. அதேபோல, 8 போட்டிகளில் களம் கண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் சந்தித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








