‘தீப்பற்றி எரியும் இருசக்கர வாகனங்கள்’ – மத்திய அமைச்சர் விளக்கம்

அதிகப்படியான வெயில் காரணமாக மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிவதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர்…

அதிகப்படியான வெயில் காரணமாக மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிவதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் அதிகப்படியான வெயில் காரணமாக மின்சார வாகனங்களின் பேட்டரிகளில் பிரச்னைகள் ஏற்பட்டு தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் நடைபெறுவதாக தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: மாணவர்களுக்கு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை 

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனங்களுடன் விற்பனை செய்யப்பட்ட அனைத்து மின்சார வாகனங்களையும் தயாரிப்பு நிறுவனங்கள் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்திய அவர்,

மின்சார வாகன துறை தற்போது தான் வளர்ச்சி பெற்று வருவதாகவும், அதற்குள் தீவிபத்து சம்பவத்தை காரணம் காட்டி முட்டுக்கட்டை போட அரசு விரும்பவில்லை என தெரிவித்தார். அதே சமயம், மக்களின் பாதுகாப்பு தான் முக்கியத்துவம் என குறிப்பிட்ட அவர், மனித உயிர் தொடர்பான விவகாரத்தில் சமரசம் கிடையாது என்று தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று திருப்பத்தூரில் மருத்துவர் ஒருவர் தன்னுடைய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சரியாக மைலேஜ் கொடுக்கவில்லை எனகூறி பெட்ரோல் ஊற்றி எரித்துள்ள சம்பவமும் நடந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.