வடகறியில் உப்பு… சமையல் மாஸ்டர் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மேலாளர்

திருச்செந்தூரில் உள்ள ஒரு உணவகத்தில் வடகறியில் உப்பு அதிகமானதால் சமையல் மாஸ்டர் மீது உணவக மேலாளர் கொதிக்கும் எண்ணையை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த வெள்ளையன் என்பவர், உணவகம்…

திருச்செந்தூரில் உள்ள ஒரு உணவகத்தில் வடகறியில் உப்பு அதிகமானதால் சமையல் மாஸ்டர் மீது உணவக மேலாளர் கொதிக்கும் எண்ணையை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த வெள்ளையன் என்பவர், உணவகம் ஒன்றில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். அங்கு மேலாளராக பணிபுரியும் பாலமுருகன் என்பவர் வடகறியை சாப்பிட்டு பார்த்துள்ளார். அப்போது உப்பு அதிகமாக உள்ளதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணையை வெள்ளையன் மீது ஊற்றியுள்ளார்.

இதனால் முகம், தலை, முதுகு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்ட வெள்ளையன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைச் செய்தி: மின்சார கம்பியில் தேர் உரசியதில் 10க்கும் மேற்பட்டோர் பலி

இந்த சம்பவத்தில், உணவக மேலாளர் பாலமுருகன் மனிதாபிமானம் இல்லாமல், இந்த செயலை மேற்கொண்டுள்ளார். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது என உணவகத்தில் இருந்த பலரும் தெரிவிகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.