திருச்செந்தூர் அருகே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்!

திருச்செந்தூர் அருகே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் எள்ளுவிலை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை மறித்து சோதனையிட்டனர். அதில்…

திருச்செந்தூர் அருகே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் எள்ளுவிலை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை மறித்து சோதனையிட்டனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக ஓட்டுநர்கள் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த முருகன், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வெங்கடேசபெருமாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ எடையுள்ள போதை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில், இந்த குட்கா புகையிலை பொருட்கள் திருநெல்வேலி பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டது என கண்டறியப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய மொத்த வியாபாரிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.