பெற்றக் குழந்தையை ஐந்தாயிரம் ரூபாய்க்காக, குடிகார தந்தை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிஷா மாநிலம் ஜஜ்புர் ( Jajpur) மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு மூன்று குழந்தைகள். மதுவுக்கு அடிமையான ரமேஷுக்கு, சரக்கில்லாமல் இருக்க முடியாது. இதனால் வேலைக்கும் ஒழுங்காக செல்வதில்லை. இதையடுத்து அவருக்கும் அவர் மனைவிக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, அவரை வீட்டை விட்டு வெளியேற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், ரமேஷின் தந்தை ரபிந்திர பரிக், வீட்டுக்கு வந்துள்ளார். கடைசி குழந்தையை தேடியிருக்கிறார். காணவில்லை. மகனிடம் கேட்டபோது சரியாக பதில் சொல்லவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்து வீடுகளில் விசாரித்தும் சரியான பதில் கிடைக்காததால், ரமேஷிடம் மீண்டும் கேட்டிருக்கிறார். அப்போது பணத்துக்காக குழந்தையை விற்றுவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பரிக், பிஞ்ஹராப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் மகன் மீது புகார் கொடுத்தார். விசாரித்த போலீசார், மித்து ஜெனா என்பவர் வீட்டில் இருந்து குழந்தையை மீட்டனர். குழந்தை இல்லாத அந்த தம்பதிக்கு, ரூ.5 ஆயிரத்துக்கு குழந்தையை விற்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து குழந்தைகள் நல அமைப்பிடன் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
ஐந்தாயிரம் ரூபாய்க்காக பெற்றக் குழந்தையை, தந்தையே விற்ற சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.