முக்கியச் செய்திகள் குற்றம்

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது

மதுரை, தேனி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கட்டயன்பட்டியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாகக் கூறியதை அடுத்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக மேலூர் சமூக நலத்துறை அலுவலர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை, சிறுவன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் ஒத்தக்கடை அருகே அரும்பனூரில் பாசனக் கால்வாய் கட்டும் பணிக்காக வந்த திண்டுக்கல்லை சேர்ந்த சிவா என்ற நபர் அப்பகுதியை சேர்ந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மதுரை குழந்தைகள் நலத்தலைவர், ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சிவா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

இதைப்போல தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் 7 வயது சிறுமிக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த 16 வயது சிறுவனை, போலீசார் கைது செய்துள்ளனர். ஆண்டிப்பட்டி அருகேவுள்ள ஏத்தகோவில் கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி, தனக்கு அதேபகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், பாலியல் தொந்தரவு கொடுப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர், ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகார் அளித்துள்ளனர். பெற்றோரின் புகாரின் அடிப்படையில், 16 வயது சிறுவனை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

Advertisement:

Related posts

உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும்: சசிகலா வேண்டுகோள்!

Ezhilarasan

Microsoft நிறுவன ஊழியர்களுக்கு தலா ₹1.12 லட்சம் போனஸ்

Jeba Arul Robinson

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு!

Halley karthi