ஆத்தூர் அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள வலசக்கல்பட்டி ஏரியின் ஒரு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார்வந்தது. இதையடுத்து வீரகனூர் காவல் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ஏரி அருகே உள்ள முட்புதரில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன், ஜெயசுதன், செந்தில்குமார் உள்ளிட்ட 16 பேரை சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 76 ஆயிரம் பணம் மற்றும் 4 இருசக்கர வாகனம்,11 செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







