முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

ஜீன்ஸ் அணிந்ததால் ஆத்திரம்.. சிறுமியை கொன்று பாலத்தில் வீசிய தாத்தா.. உ.பியில் கொடூரம்

ஜீன்ஸ் அணிந்ததற்காக 17 வயது சிறுமியை சொந்த தாத்தாவும் உறவினர்களும் அடித்துக் கொன்று பாலத்தில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் தியோரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமர்நாத் பஸ்வான். இவர் வேலைக்காக பஞ்சாப் மாநிலம் லூதியானாவுக்கு சென்றார். அவருடன் மனைவி மற்றும் 17 வயது மகளும் சென்றனர். சில மாதங்கள் கழித்து அவர் மனைவியும் 17 வயது மகளும் சொந்த ஊருக்குத் திரும்பினர்.

லூதியானாவில் இருந்தபோது அவர்கள் மகளுக்கு மாடர்னாக உடைகள் அணிவது பழக்கமாகி இருக்கிறது. குறிப்பாக ஜீன்ஸ் ஷாட்ஸும் டாப்ஸும் மட்டும் அணிவதை வழக்கமாக்கி இருக்கிறார். இந்நிலையில் ஊருக்குத் திரும்பிய பின்னும் அதையே அவர் பின்பற்றி இருக்கிறார்.

இது அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் ஊர் ஸ்டைல் உடைகளை அணியுமாறு கூறியுள்ளனர். ஆனால், சிறுமி கேட்கவில்லை. இந்நிலை யில் கடந்த 2 நாட்களுக்கு முன் இந்த உடை பிரச்னை எழுந்திருக்கிறது. சிறுமி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

ஆத்திரமடைந்த உறவினர்கள், சிறுமியை சரமாரியாகத் தாக்கினர். இதில் சுவரில் மோதிய அவர், மண்டை உடைந்தது, சரமாரியாக அடித்துக் கொன்ற அவர் உடலை, ஆட்டோவில் தூக்கி சென்றனர். பின்னர், காஸ்யா – பாட்னா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள படன்வா பாலத்தில் வீசினார்.

ஆனால், சிறுமியில் உடல் பாலத்திலேயே தொங்கியது. இதுபற்றி அந்தப் பக்கம் சென்றவர்கள் கொடுத்த தகவலை அடுத்து விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் இந்த வழக்கு தொடர்பாக சிறுமியின் தாத்தாவையும், ஆட்டோ டிரைவரையும் கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

ஜீன்ஸ் அணிந்ததற்காக, சொந்த தாத்தாவே பேத்தியை அடித்துக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு!

Vandhana

ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் வாபஸ்: தமிழக அரசு அறிவிப்பு

Halley karthi

தொடர் கொலைகளில் முடிந்த விஜய் ரசிகர்களுக்கு இடையேயான மோதல்!

Jeba Arul Robinson