பாடகர் #Mano-வின் மனைவியை தாக்கிய விவகாரம் | 2 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை!

மனோவின் மனைவியை தாக்கி விட்டு காரில் வைத்திருந்த ரூ.2.5 லட்சம், 12 சவரன் நகைகளை திருடி சென்ற புகாரில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த 10-ம் தேதி நள்ளிரவு பாடகர் மனோவின்…

police ,arrested ,complaint ,Mano wife , steal,jewelery ,

மனோவின் மனைவியை தாக்கி விட்டு காரில் வைத்திருந்த ரூ.2.5 லட்சம், 12 சவரன் நகைகளை திருடி சென்ற புகாரில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 10-ம் தேதி நள்ளிரவு பாடகர் மனோவின் மகன்கள் பயிற்சி முடிந்து, வீட்டருகே உள்ள உணவகத்துக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு நின்ற 10 பேர், கிருபாகரன், நிதிஷ் ஆகிய இருவரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் கிருபாகரனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் : Vettaiyan-க்கு தடை இல்லை…உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

இதற்கிடையே பாடகர் மனோவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மனோவின் மனைவியை தாக்கி விட்டு காரில் வைத்திருந்த ரூ.2.5 லட்சம் பணம் மற்றும் 12 சவரன் தங்க நகைகளை திருடி சென்றதாக பாடகர் மனோவின் மனைவி ஜமீலா கடந்த மாதம் 12ம் தேதி புகார் அளித்தார்.

இந்நிலையில், பாடகர் மனோ மனைவி கொடுத்த புகாரின் பேரில் கிருபாகரன் மற்றும் ரித்திஷ் குமார் ஆகிய இருவரை சென்னை வளசரவாக்கம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே, பாடகர் மனோவின் மகன்கள் இவர்களை தாக்கியதாக கொடுத்த புகாரில் பாடகர் மனோவின் மகன்கள் முன் ஜாமின் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.