இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 -வது டி 20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. முதல் டி 20 போட்டி மழையால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது டி 20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. ஆனால் இங்கிலாந்து நிர்ணயித்த 202 என்கிற இலக்கை எட்ட முடியாமல் 76 ரன்களுக்கு படுதோல்வியை தழுவியது. 2-வது மற்றும் 3-வது போட்டிகளை இங்கிலாந்து அணி வென்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், இந்தியா – இங்கிலாந்து இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு முதல் 5 ஆட்டங்களில் (4-ல் தோல்வி, ஒன்று மழையால் பாதியில் ரத்து) இந்தியா ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. அதேநேரம் தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி முனைப்பு காட்டும்.




