இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மின் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ரன்’. காதல், ஆக்சன், குடும்ப உணர்வுகள் என அனைத்தையும் இணைத்து உருவான இப்படம் அப்போது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தயாரிப்பாளர் எ.எம். ரத்னம் தயாரித்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். குறிப்பாக, பாடல்கள், சண்டைக் காட்சிகள் மற்றும் மாதவன் – மீரா ஜாஸ்மின் ஜோடியின் நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் ரன் திரைப்படம், நாளை (ஜூலை 10) திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்தக் கிளாசிக் திரைப்படத்தை, புதிய தலைமுறை ரசிகர்களும் பெரிய திரையில் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ரீ-ரிலீஸ் ஆகும் `ரன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட்ட இந்த டிரெய்லர் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.




