செய்திகள்

பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை குறித்து பிரதமரை விமர்சித்த ராகுல் காந்தி!

“குறைந்தப்பட்ட வளர்ச்சி, அதிகப்பட்ச வேலைவாய்ப்பின்மை“ குறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி பிரதமரை விமர்சித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளிவந்த பொருளாதார வளர்ச்சி குறித்த அறிவிப்பு கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது -7.3 சதவிகிதமாக நடப்பாண்டில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இதனை குறிப்பிட்டு வயநாடு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குறைந்தப்பட்ட வளர்ச்சி, அதிகப்பட்ச வேலைவாய்ப்பின்மை நிலவி வருவதாக ட்விட்டர் வாயிலாக விமர்சித்துள்ளார்.

இந்த பொருளாதார பாதிப்புகள் பெரிய அளவில் இருந்திருக்கும் என்றும், ஆனால் மத்திய அரசின் நடவடிக்கைகளால் இது குறைந்த அளவாக பதிவாகியுள்ளது என மத்திய அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. தற்போதைய சூழலில் பல மாநில அரசுகள் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த தீவிரமான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன. இதனால் சிறுகுறு தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

இந்த பாதிப்பே மத்திய அரசு வெளியிட்ட நடப்பாண்டு பொருளாதார அறிக்கையில் எதிரொலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நியூஸ் 7 தமிழின் மாணவ ஊடகவியலாளர்கள் திட்ட தொடக்க விழா

Web Editor

மணிப்பூர் முதலமைச்சராக பைரன் சிங் ஒருமனதாக தேர்வு

G SaravanaKumar

கொரோனா தடுப்பு ஆலோசனை: முதல்வர் தலைமையில் குழு அமைப்பு!

Halley Karthik