’சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’: வைரலாகும் ’ஜகமே தந்திரம்’ டிரைலர்!

தனுஷ் நடித்துள்ள ’ஜகமே தந்திரம்’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, மலையாள நடிகர் லால் ஜோஸ்,…

தனுஷ் நடித்துள்ள ’ஜகமே தந்திரம்’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, மலையாள நடிகர் லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘ஜகமே தந்திரம்’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் சஷிகாந்த் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இதில் ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. டிரைலரின் இறுதியில், ’சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’ என்று நடிகர் தனுஷ் கூறுவது போல டிரைலர் முடிகிறது. இந்த டிரைலர் ரசிகர்களிடையே அதிக வரவெற்பை பெற்றுள்ளது.

அதோடு கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தள்ளிப் போன இந்தப் படம், வரும் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.