முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னையில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், அவரது வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மதுக்கடைகளும் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் அவரவர்களின் வீட்டின் முன் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் அன்புமணி ராமதாஸ் அவரது வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அவர் முழக்கம் எழுப்பினார். மேலும், தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி புதுச்சேரி வழுதாவூர் சாலையில் பாமகவினர் கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாட்டாளி தொழிற்சங்கத் தலைவர் ஜெயபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழல் உள்ளதால் மதுக்கடைகளை உடனடியாக மூடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சசிகலா சொத்துக்கள் முடக்கம்!

Niruban Chakkaaravarthi

பீகாரில் சாலை விபத்து: நடிகர் சுஷாந்த் சிங் உறவினர்கள் 5 பேர் பலி

Ezhilarasan

காவலரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

Saravana Kumar