முக்கியச் செய்திகள் தமிழகம்

மநீம எஸ்.சி/ எஸ்.டி மாநில செயலாளர் பூவை ஜெகதிஷ் குமார் கட்சியிலிருந்து விலகல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் எஸ்.சி/ எஸ்.டி மாநில செயலாளராக பொறுப்பு வகித்திருந்த பூவை.ஜெகதிஷ் குமார் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் 2018லிருந்து கட்சிக்காக நான் உண்மையாக உழைத்தேன். எனக்கு இருமுறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. அதற்காக நன்றி. மக்கள் நீதி மய்யம் கட்சி நன்றாக செயல்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில், கட்சிக்கு சம்பந்தமில்லாத சில நிறுவனங்கள் கட்சிக்குள் செயல்பட்டு வந்ததால் கட்சி அதன் வரவேற்பை தொண்டர்கள் மத்தியில் இழந்தது. மேலும், இந்நிறுவனம் சமூக பாகுபாடு அடிப்படையில் நடந்துக்கொண்டது. 2021 தேர்தலில், எஸ்சி, எஸ்டி சட்டமன்ற எல்லாத் தொகுதியிலும் போட்டியிட மறுத்துவிட்டு கூட்டணிக்கட்சிகளுக்கு சக்திக்கு மீறிய தொகுதிகளை கொடுத்ததால் கட்சியின் தோற்றம் சீர்குலைந்து போனது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மட்டுமல்லாது நேர்மையாய் கட்சிக்கு உழைத்த டாக்டர் மகேந்திரன் போன்றோர் மீது பழி சொல் கூறி நீக்கம் செய்ததால் கட்சி சிதறி போனது. இம்மாதிரியான செயல்கள் என்னை போன்ற உண்மை தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே நான் மநீம கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவித்துக்கொள்கிறேன்.” என ஜெகதீஷ் குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே 2021 சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையடுத்து டாக்டர் மகேந்திரன் மற்றும் இதர முக்கிய பொறுப்பாளர்கள் மநீமவிலிருந்து விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

22 மாவட்டங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது: மத்திய அரசு

EZHILARASAN D

சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Web Editor

உள்ளாட்சிப் பதவிகளை ஏலமிடக்கூடாது: மாநில தேர்தல் ஆணையம்

EZHILARASAN D