2024 மக்களவைத் தேர்தலுக்கு முன், பிரதமர் மோடி நிச்சயம் கட்சத்தீவை மீட்பார் என்று பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில துணைத்தலைவர், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன், பிரதமர் மோடி நிச்சயம் கட்சத்தீவை மீட்பார் எனத் தெரிவித்தார். மேலும், நாளை 8-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 10,000 இடங்களில் பாஜக சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட உள்ளதாகவும், மாமல்லபுரத்தில் நடைபெறும் நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘மகனைச் சிகிச்சை அளிக்க வைத்துவிட்டு சுற்றுலா சென்ற தலைமை மருத்துவர்’
தொடர்ந்து பேசிய அவர், தேசநலனைக் கருத்தில் கொண்டு இளமைத்துடிப்பான ராணுவத்தை உருவாக்கவே அக்னிபாத் திட்டம் கொண்டுவரப்பட்டதாகவும், தேசப்பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் அரசியல் கலப்பது நல்லதல்ல என்ற அவர், அண்ணாமலை மீது திமுக எத்தனை வழக்குகளைப் போட்டாலும், அத்தனையையும் எதிர்கொள்ள அவர் தயாராக இருப்பதாகவும், திமுகவின் அடுத்தகட்ட ஊழல் பட்டியல் ஜூலையில் வெளியிடப்படும் எனக் கூறினார். மேலும், நேஷனல் ஹெரால்டு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது, ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்தும் காங்கிரஸ் கட்சியின் செயல் சிறுபிள்ளைத்தனமானது எனத் தெரிவித்தார்.