முக்கியச் செய்திகள் இந்தியா

காஷ்மீரில் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

ஜம்மு- காஷ்மீரில் தேர்தல் உள்ளிட்ட பணிகளைத் தொடங்குவது தொடர்பாக பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஜம்மு- காஷ்மீரில் அரசியல் சட்டம் 370 பிரிவின் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தைக் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது.

இந்நிலையில் அங்குச் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஜம்மு- காஷ்மீர் ஆளுநர், காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 14 முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் உள்பட காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது மிர், முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முப்தி, குலாம் நபி அசாத் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

2019ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி, காஷ்மீர் மற்றும் லடாக் இருவேறு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட பிறகு, மத்திய அரசு, காஷ்மீரில் உள்ள அனைத்துக் கட்சிகளிடம் நடத்தும் முதல் கூட்டம் இதுவாகும்.

Advertisement:
SHARE

Related posts

மனைவிக்கு கொரோனா தொற்று: மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்துக்கொண்ட கணவர்

Ezhilarasan

கொரோனா பாதிப்பு புள்ளிவிவரங்களை வெளியிடுவது அவமானமல்ல: உயர்நீதிமன்றம்

Jeba Arul Robinson

இன்று முதல் 7-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்தது புதுச்சேரி அரசு!

Dhamotharan